Thursday, February 23, 2012
What is Blu-ray Disc?
புயல் வேகத்தில் வளர்ந்து வரும் கணினி தொழில் நுட்ப உலகில் தகவல் சேமிக்கும் வட்டுகளின் வளர்ச்சியும்,தேவையும் அதே வேகத்தில் வளர்ந்து வருகிறது.1971 இல் 8 இன்ச் ஃபிளாப்பி தட்டில் வெறும் 79KB கொள்ளளவோடு ஆரம்பித்த இந்த பயணம் நேற்று ஜப்பானிய நிறுவனம் Pioneer அறிவித்த 500GBஅளவு தகவல் சேமிக்கும் ப்ளு ரே(Blu Ray)வட்டு வரை வந்துள்ளது.
ப்ளூ ரே.அதற்கு முன்னர் CD,DVD பற்றி சிறிது பார்ப்போம்.Sony மற்றும் Philips நிறுவன கண்டுபிடிப்பான CD 1980களின் ஆரம்பத்திலேயேகண்டிபிடிக்கப்பட்டாலும் 1980களின் இறுதியில் சந்தைக்கு முழுவதுமாக வந்து 1990 களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.பொதுவாக 650MB முதல் 700MBவரை தகவல் கொள்ளளவு கொண்டது.
1993 இல் மீண்டும் அதிக கொள்ளளவு கொண்ட தகவல் சேமிக்கும் வட்டு உருவாக்குவதில் Sony,Philips நிறுவனங்கள் ஒரு பக்கமும்Toshiba,Pioneer,JVC,Mitshubishi மற்றொரு பக்கமும் கொண்ட போட்டியில் இரு வேறு விதமான தகவல் வரையறை(Specification) கொண்ட வட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
IBM,APPLE,DELL,SUN,MICROSOFT போன்ற மெகா நிறுவனங்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு DVD என்ற வரையறை உருவானது.CD போலவே இதுவும்Polycarbonate ஆல் தயாரிக்கப்பட்டு,தகவல்களை சேமிக்க மேடு,பள்ளங்களை கொண்டு பொதுவாக ஒரு அடுக்கில் 4.7GB தகவல் கொள்ளளவு கொண்டிருந்தாலும் வட்டின் இரு பக்கமும் நான்கு அடுக்குகளோடு அதிகபட்சமாக 17 GB தகவல் சேமிக்கலாம்.
2002 ஆம் ஆண்டிலேயே Sony,Philips மற்றும் Pioneer நிறுவனங்கள் ப்ளூ ரே வட்டு முன் மாதிரியை கண்டுபிடித்த பிறகு 2004 இல் வரையறை செய்யப்பட்டு 2006 இல் சந்தைக்கு வந்தது.இதனோடு போட்டியிட்ட HD-DVD வரையறைக்கு தோஷிபா நிறுவனம் இனி பக்க பலமாக இருக்காது என சில மாதங்களுக்கு முன அறிவித்தது.இனி இப்போதைக்கு ப்ளு ரே தான்.
ப்ளூ ரே என பெயர் வந்ததற்கு காரணம் இந்த வட்டுகளில் எழுதவும் படிக்கவும் CD,DVD போல் அகச்சிவப்பு லேசர் கதிர்களை உபயோகிக்காமல்,நீல நிற லேசர்(உண்மையில் அது ஊதா நிறமே)கதிர்களை உபயோகிப்பதால் அந்த பெயர் வந்தது.தற்போதுள்ள ப்ளு ரே வட்டுகள் இரு அடுக்குகளில் ஒரு அடுக்குக்கு 25GBஅளவில் அதிகபட்சமாக இரு அடுக்குகளில் 50GB தகவல்களை சேமிக்கும்.
Pioneer நிறுவனம் அறிவித்துள்ள புதிய ப்ளு ரே வட்டு 20 அடுக்குகளில் 25GB வீதம்500GB வரைக்கும் சேமிக்கும் திறன் கொண்டது.இன்னும் இரண்டே ஆண்டுகளில் சந்தைக்கு வந்து விடும்.அதி துல்லிய(High Definition)படங்களை கொள்வதற்கு சரியான முறை ப்ளு ரே.
more Details visit www.blu-ray.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment