விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Friday, February 24, 2012

Real world Example of Abstraction


Abstraction:

Abstraction is "To represent the essential feature without representing the back ground details."

Abstraction provides you a generalized view of your classes or object by providing relevant information.

Real world Example of Abstraction: -

Suppose you have 3 mobile phones as following:-

Nokia 1400 (Features:- Calling, SMS)

Nokia 2700 (Features:- Calling, SMS, FM Radio, MP3, Camera)

Sony Ericsson (Features:-Calling, SMS, FM Radio, MP3, Camera, Video Recording, Reading E-mails)

Abstract information (Necessary and Common Information) for the object "Mobile Phone" is make a call to any number and can send SMS."

so that, for mobile phone object you will have abstract class like following:-

abstract class MobilePhone

{

public void Calling();

public void SendSMS();

}

public class Nokia1400 : MobilePhone

{

}

public class Nokia2700 : MobilePhone

{

public void FMRadio();

public void MP3();

public void Camera();

}

public class Sony Ericsson : MobilePhone

{

public void FMRadio();

public void MP3();

public void Camera();

public void Recording();

public void ReadAndSendEmails();

}

Abstraction means putting all the variables and methods in a class which are necessary.

For example: - Abstract class and abstract method.

Abstraction is the common thing.

example:

If somebody in your collage tell you to fill application form, you will fill your details like name, address, data of birth, which semester, percentage you have got etc.

If some doctor gives you an application to fill the details, you will fill the details like name, address, date of birth, blood group, height and weight.

See in the above example what is the common thing?

Age, name, address so you can create the class which consist of common thing that is called abstract class.

That class is not complete and it can inherit by other class.

Share/Save/Bookmark

Thursday, February 23, 2012

Windows History full details


Windows full details (win1.0 t0 win7):-

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.

1) விண்டோஸ் 1.0

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.

2) விண்டோஸ் 2.0ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

3) விண்டோஸ் 3.01990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

4) விண்டோஸ் 3.11
விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

5) விண்டோஸ் 3.11 NT32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.
6)விண்டோஸ் 951995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

7) விண்டோஸ் 98
விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

8) விண்டோஸ் 20002000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

9) விண்டோஸ் ME
இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

10) விண்டோஸ் XPகோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

11)விண்டோஸ் விஸ்டா
பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.

12) விண்டோஸ் 7
வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.


Share/Save/Bookmark

What is Blu-ray Disc?




புயல் வேகத்தில் வளர்ந்து வரும் கணினி தொழில் நுட்ப உலகில் தகவல் சேமிக்கும் வட்டுகளின் வளர்ச்சியும்,தேவையும் அதே வேகத்தில் வளர்ந்து வருகிறது.1971 இல் 8 இன்ச் ஃபிளாப்பி தட்டில் வெறும் 79KB கொள்ளளவோடு ஆரம்பித்த இந்த பயணம் நேற்று ஜப்பானிய நிறுவனம் Pioneer அறிவித்த 500GBஅளவு தகவல் சேமிக்கும் ப்ளு ரே(Blu Ray)வட்டு வரை வந்துள்ளது.

ப்ளூ ரே.அதற்கு முன்னர் CD,DVD பற்றி சிறிது
பார்ப்போம்.Sony மற்றும் Philips நிறுவன கண்டுபிடிப்பான CD 1980களின் ஆரம்பத்திலேயேகண்டிபிடிக்கப்பட்டாலும் 1980களின் இறுதியில் சந்தைக்கு முழுவதுமாக வந்து 1990 களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.பொதுவாக 650MB முதல் 700MBவரை தகவல் கொள்ளளவு கொண்டது.

1993 இல் மீண்டும் அதிக கொள்ளளவு கொண்ட தகவல் சேமிக்கும் வட்டு உருவாக்குவதில் Sony,Philips நிறுவனங்கள் ஒரு பக்கமும்Toshiba,Pioneer,JVC,Mitshubishi மற்றொரு பக்கமும் கொண்ட போட்டியில் இரு வேறு விதமான தகவல் வரையறை(Specification) கொண்ட வட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
IBM,APPLE,DELL,SUN,MICROSOFT போன்ற மெகா நிறுவனங்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு DVD என்ற வரையறை உருவானது.CD போலவே இதுவும்Polycarbonate ஆல் தயாரிக்கப்பட்டு,தகவல்களை சேமிக்க மேடு,பள்ளங்களை கொண்டு பொதுவாக ஒரு அடுக்கில் 4.7GB தகவல் கொள்ளளவு கொண்டிருந்தாலும் வட்டின் இரு பக்கமும் நான்கு அடுக்குகளோடு அதிகபட்சமாக 17 GB தகவல் சேமிக்கலாம்.

2002 ஆம் ஆண்டிலேயே Sony,Philips மற்றும் Pioneer நிறுவனங்கள் ப்ளூ ரே வட்டு முன் மாதிரியை கண்டுபிடித்த பிறகு 2004 இல் வரைய
றை செய்யப்பட்டு 2006 இல் சந்தைக்கு வந்தது.இதனோடு போட்டியிட்ட HD-DVD வரையறைக்கு தோஷிபா நிறுவனம் இனி பக்க பலமாக இருக்காது என சில மாதங்களுக்கு முன அறிவித்தது.இனி இப்போதைக்கு ப்ளு ரே தான்.

ப்ளூ ரே என பெயர் வந்ததற்கு காரணம் இந்த வட்டுகளில் எழுதவும் படிக்கவும் CD,DVD போல் அகச்சிவப்பு லேசர் கதிர்களை உபயோகிக்காமல்,நீல நிற லேசர்(உண்மையில் அது ஊதா நிறமே)கதிர்களை உபயோகிப்பதால் அந்த பெயர் வந்தது.தற்போதுள்ள ப்ளு ரே வட்டுகள் இரு அடுக்குகளில் ஒரு அடுக்குக்கு 25GBஅளவில் அதிகபட்சமாக இரு அடுக்குகளில் 50GB தகவல்களை சேமிக்கும்.
Pioneer நிறுவனம் அறிவித்துள்ள புதிய ப்ளு ரே வட்டு 20 அடுக்குகளில் 25GB வீதம்500GB வரைக்கும் சேமிக்கும் திறன் கொண்டது.இன்னும் இரண்டே ஆண்டுகளில் சந்தைக்கு வந்து விடும்.அதி துல்லிய(High Definition)படங்களை கொள்வதற்கு சரியான முறை ப்ளு ரே.

more Details visit www.blu-ray.com

Share/Save/Bookmark

What is Bluetooth?



ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.

more details visit www.bluetomorrow.com

Share/Save/Bookmark

What is Wi-Fi?




"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி,இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்குஅடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகுவேகமாகபரவலாகிவருகிறது.

Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந் ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ்நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்தியசந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ண்டுவாக்கில் இது 900மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும்,அச்சுறுத்தல்களையும் அளிக் துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்புநிறுவனங்கள், இதற்கு காரணமா ரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது.அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின்கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டுஅதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.விசாரணை
ள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில்நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில்உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும்புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன்பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெ
ள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல்சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப்பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள்என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi
தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்டஇணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள்வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்றகம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இதுஎவ்வளவு பயனுள்ளதோந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது.எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாகஅமையும்.



என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒருநிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல்புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடிஎன்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல்இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒருநெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக
நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையேஇணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்றஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியைபரவலாகக்கொண்டு யங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள்மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.



இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றிகடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லதுஅது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில்இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEPபாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதுநல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வகருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)உடனடியாகமாற்றவும்.
  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்திவிடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும்அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.
  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls)உருவாக்கவும்.
  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள்இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள்ஏற்படும்.


இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது.நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்டஅளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளைஇவைகடைபிடிக்க வேண்டும்.






Share/Save/Bookmark

File எத்தனை வகைகள் (Types of Files)


பைல்கள் எத்தனை வகைகள்:-

விண்டோஸ் அதற்கான பைலை அறிந்து எந்த புரோகிராம் அதனைத் திறக்குமோ அதனை இயக்கி பைலையும் காட்டுகிறது.
ஆனால் சில நேரங்களில் Open with window என்னும் விண்டோ காட்டப்பட்டு புரோகிராம்களின் பட்டியல் அடுக்கப்பட்டு எந்த புரோகிராம் வழி பைலைத் திறக்க என்று கேட்கப்படும். இது பெரும்பாலும் விண்டோஸ் இயக்கத்தால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத பைல் கிடைக்கையில் இது போல விண்டோ கிடைக்கும்.

ஆனால் ஒரு முறை இது போல விண்டோவில் பைலுக்கான புரோகிராமினை தேர்வு செய்து அதன் மூலம் திறந்துவிட்டால் பின் அதே வகை பைல் கிடைக்கையில் விண்டோஸ் அந்த புரோகிராமினையே இயக்கும். மேலும்Always use the selected Progroam with this kind of file’ என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் கம்ப்யூட்டர் அதனை நினைவில் வைத்து மறுபடியும் உங்களைக் கேட்காமல் இயக்கும். எந்த வகை பைலுக்கு எந்த புரோகிராம் சரியாக இருக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

1. டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்: கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. Notepadஉட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

.ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம்.Portable Document Fileஎன்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள்.அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன.

htm / html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம்.

.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும்.வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

2.சுருக்கப்பட்ட பைல்கள்:பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம்பயன்படுத்தப்படுகிறது.

.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது.

3.பட பைல்கள்:அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.

.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும்.

.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.

.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும்.விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர்.

4.ஆடியோ பைல்கள்:
.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும்.விண் ஆம்ப், விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.

.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர்இயக்குகின்றன.


aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.


.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும்.

.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.


5.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்: சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும்.

.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.

.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.

.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர்.




Share/Save/Bookmark
Blog Widget by LinkWithin
 

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Don't miss a single post. Please add this site's RSS feed in Google Reader or any other RSS reader and avoid disappointment when there is no new post.
Page copy protected against web site content infringement by Copyscape

Rss Feed

Posts Comments

My Followers

Computer Bird Copyright © 2009 Flower Garden is Designed by Shiyamsena