விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Thursday, February 23, 2012

File எத்தனை வகைகள் (Types of Files)


பைல்கள் எத்தனை வகைகள்:-

விண்டோஸ் அதற்கான பைலை அறிந்து எந்த புரோகிராம் அதனைத் திறக்குமோ அதனை இயக்கி பைலையும் காட்டுகிறது.
ஆனால் சில நேரங்களில் Open with window என்னும் விண்டோ காட்டப்பட்டு புரோகிராம்களின் பட்டியல் அடுக்கப்பட்டு எந்த புரோகிராம் வழி பைலைத் திறக்க என்று கேட்கப்படும். இது பெரும்பாலும் விண்டோஸ் இயக்கத்தால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத பைல் கிடைக்கையில் இது போல விண்டோ கிடைக்கும்.

ஆனால் ஒரு முறை இது போல விண்டோவில் பைலுக்கான புரோகிராமினை தேர்வு செய்து அதன் மூலம் திறந்துவிட்டால் பின் அதே வகை பைல் கிடைக்கையில் விண்டோஸ் அந்த புரோகிராமினையே இயக்கும். மேலும்Always use the selected Progroam with this kind of file’ என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் கம்ப்யூட்டர் அதனை நினைவில் வைத்து மறுபடியும் உங்களைக் கேட்காமல் இயக்கும். எந்த வகை பைலுக்கு எந்த புரோகிராம் சரியாக இருக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

1. டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்: கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. Notepadஉட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

.ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம்.Portable Document Fileஎன்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள்.அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன.

htm / html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம்.

.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும்.வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

2.சுருக்கப்பட்ட பைல்கள்:பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம்பயன்படுத்தப்படுகிறது.

.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது.

3.பட பைல்கள்:அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.

.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும்.

.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.

.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும்.விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர்.

4.ஆடியோ பைல்கள்:
.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும்.விண் ஆம்ப், விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.

.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர்இயக்குகின்றன.


aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.


.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும்.

.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.


5.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்: சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும்.

.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.

.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.

.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர்.




Share/Save/Bookmark

1 comments:

திண்டுக்கல் தனபாலன் on March 18, 2012 at 9:26 AM said...

விளக்கமான பதிவு சார் ! நன்றி !

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment

Blog Widget by LinkWithin
 

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Don't miss a single post. Please add this site's RSS feed in Google Reader or any other RSS reader and avoid disappointment when there is no new post.
Page copy protected against web site content infringement by Copyscape

Rss Feed

Posts Comments

My Followers

Computer Bird Copyright © 2009 Flower Garden is Designed by Shiyamsena