இந்த Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard Disk20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும் கொண்டதாக இருந்தது. இது முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters" எனவும் பின்னர் "Floppy Disk"கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும் அழைக்கப்பட்டது.
தற்போதைய நவீன கணிணிகளில் குறைந்தபட்சம் 40 GB மற்றும் அதிகபட்சம்250 GB கொள்ளளவு கொண்ட Hard Disk உபயோகிக்கப்படுகின்றது. எல்லா தகவல்களும், உதாரணமாக : Database / Image Files எதுவாக இருந்தாலும் அவைகள் "Files" - களாக சேமிக்கப்படுகின்றன. அவை சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது.
இரண்டு வகையான முறையில் Hard Disk- இன் Performance-ஐ அளக்கலாம்.
Data Rate - இந்த முறையில் Hard Disk ஒரு நொடியில் எத்தனை Bytes-ஐ CPU - க்கு அனுப்புகிறது என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் வ்ண்தட்டின் Performanceசோதிக்கப்படுகிறது, பொதுவாக இந்த Data Rate ஒரு நொடிக்கு 5 Mb - 40 Mb வரை இருக்கும்.
Seek Time - சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Diskதேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம் இல்லையா ? அவ்வாறு கொடுக்கும் கால அளவு Seek Time என்று அழைக்கப்படுகிறது.பொதுவாக இந்த Seek Time ஒரு நொடிக்கு 10 - 20 Milliseconds வரை இருக்கும்.
கீழே உள்ளது ஒரு Hard Disk - இன் படம்.



Plotters - இது பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 3600, 4200, 5400 மற்றும் 7200 தடவைசுழலும் தன்மை கொண்டது. இடையே RPM என்று அழைக்கிறார்கள், இதைவைத்தே வண்தட்டின் வேகம் கணக்கிடப்படுகிறது, Hard Disk - இன்கொள்ளளவை கூட்டவும் இந்த Plotters பயன்படுகிறது. தகவல்கள் இந்த Plotters - இன் மேற்பரப்பில் Sectors and Tracks - இல் சேமிக்கப்படுகின்றன.
Arms - இந்த பாகம்தான் Read / Write Head-ஐ கையாளுகின்றது, இதன் அமைப்பு எளிமையாகவும் மற்றும் வேகமாக இயங்குகின்ற வகையிலும் (50 முறைமுன்னும் பின்னும்) ஒரு சிறிய அதிவேக மோட்டாருடன் உடன் இணைந்துள்ளது.
இதைத்தவிர, மற்றும் பல பாகங்கள் மேலே உள்ள படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கினைந்துதான் ஒரு வண்தட்டு இயங்குகிறது.
அடுத்து முக்கியமான பகுதிகள்
Tracks, Sectors & Clusters
Tracks, Plotter Disk - ஐ சுற்றிலும் concentric circles - ஆகவும்,Sectors, Tracks - இன் பகுதியாகவும் உள்ளன.
கீழே உள்ள படத்தை பாருங்கள் :
Clusters என்பது Sectors-இன் தொகுப்பாக உள்ளது. கீழ்கண்ட Table-ஐ பாருங்கள்,
Hard Disk - ஐ பொதுவாக 4 பகுதியாகப் பிரிக்கலாம், அவை,
Boot Area / Boot Record - Sector 0
FAT Area
Root Directory
Data Area
Data Area-இல் Files, Sub Directories ஆகியவை சேமிக்கப்படுகின்றன, இந்த Data Area - வின் Sectors - Clusters எனப்படுகின்றன. கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.
அடுத்தது, Root Directory - ஒரு Hard Disk - இல் உள்ள அனைத்து Partitions - க்கும் ஒரு Root Directory இருக்கும், இதற்கு கீழே உள்ள Directories - Sub Directories என அழைக்கப்படும்.
அடுத்துள்ள Data Area மிகவும் முக்கியமானது, இதில்தான் அனைத்து Files மற்றும் Sub Directories சேமிக்கப்படுகின்றன.
Hard Disk - ஐ கீழ்கண்ட Utilities மூலம் திரம்பட கையாளளாம்,
FDisk
Scan Disk
Defrag
மேற்கண்ட அனைத்தும் Microsoft நிறுவனத்தின் Utilities, இவையனைத்தும் MS Windows - உடன் கிடைக்கும், மற்றும் வேறு Utilities பயன்படுத்தியும் Hard Disk - ஐ நிர்வகிக்கலாம்.
Hard Disk-மேலும் சில தகவல் :
உலகின் முதல் 2TB drive

1 comments:
விளக்கமான பதிவு ! ரொம்ப நன்றி நண்பரே !
Post a Comment